இந்தியா

இந்தியாவுக்கு இலவச 'வைஃபை' அளிக்க  வருது 'கூகிள் ஸ்டேஷன்'!

லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு  'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின்  மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.

DIN

லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு  'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின்  மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.

பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகிள் இன்று தனது 18-ஆவது பிறந்த  நாளைக் கொண்டாடுகிறது. அதை ஒட்டி தில்லிக்கு அருகே உ ள்ள குர்கிராமத்தில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூகிளின் 'அடுத்த பில்லியன் பயனாளர்கள்' பிரிவின் இணை இயக்குனர் சீஷர் சென்குப்தா தெரிவித்ததாவது:

கூகிள் இன்று முதல் 'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பை இந்தியாவில் கூகிள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்கள்  அதிகமாக கூடுகின்ற வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், உணவு  விடுதிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில்  இலவச வைஃபை' வசதி வழங்கப்படும்.

இதன் மூலம் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலிருந்து சில நிமிட  தூர நடையில் அதிவேக இணைய வசதியை பெற முடியும்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகிள் நிறுவனம் தற்போது மத்திய ரயில்வேயின் 'ரயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து நாடுமுழுவதும் 52 ரயில்நிலையங்களில், இலவச 'வைஃபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT