இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபையை அணுகுவோம்: பாகிஸ்தான்

DIN

சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா மீறும்பட்சத்தில் ஐ.நா. சபையையும், சர்வதேச நீதிமன்றத்தையும் அணுக வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு தண்ணீரை மட்டுமே பாகிஸ்தானுக்கு வழங்க முடியும் என்று இந்தியா தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும் மூன்று நதிகளில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதாவது, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கும் அதிகமாக இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தமானது 58 ஆண்டுகள் பழமையானது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நீரை மட்டும்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறும்பட்சத்தில், அது பாகிஸ்தான் மீது தொடுக்கப்படும் போராகவும், சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவுமே கருதப்படும்.
எனவே, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சிந்து நதி நீரின் அளவு குறைக்கப்பட்டால் ஐ.நா. சபையையும், சர்வதேச நீதிமன்றத்தையும் பாகிஸ்தான் அணுகும். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முறையிடும் என்றார் சர்தாஜ் அஜீஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT