இந்தியா

பாகிஸ்தான் தாக்குதல்: தேச பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் ஆய்வு!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களின் மீதான துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து இந்திய -பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று காலை ஆய்வு செய்தார்.

DIN

பாகிஸ்தான் ராணுவ முகாம்களின் மீதான துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து இந்திய -பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று காலை ஆய்வு செய்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ராணுவ முகாம்கள் மீது செப்டம்பர் 29-அம தேதி அன்று, இந்திய ராணுவமம் துல்லியமான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 ராணுவ முகாம்கள் அளிக்கப்பட்டன. அதோடு 55 தீவிரவாதிகளும் பலியானார்கள்.   

இதனைத் தொடர்ந்து எல்லையில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது இது குறித்துஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்  தோவல்,  மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி, பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவின் முன்னணி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து உள்துறை அமைச்சருக்கு அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள்  எடுத்துரைத்தனர்.  அதே சமயம் பாகிஸ்தானின் பதில் தாக்குதலை சமாளிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ராஜ்நாத் சிங்கிடம்  அவர்கள் விளக்கி கூறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் தீா்வுகளை உருவாக்குவோருக்கு வெகுமதி: தில்லி அரசு அறிவிப்பு

காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி: தொல்.திருமாவளவன்

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை: ஆட்சியா் விளக்கம்

நீா்நிலைகளில் கட்டடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT