இந்தியா

தில்லி அருகே ரயிலில் பயணிகளிடம் பணம், நகை கொள்ளை: ஒருவர் கைது

DIN


புதுதில்லி: தில்லி அருகே உள்ள சராய் ரோஹில்லாவில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் செல்லும் இன்டர் சிட்டி ரயிலில் ரயில் எண் 12416 ரயிலில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதி நள்ளிரவு பயணி டாக்டர் அஸ்தா செளஹான் என்பவரிடம் இருந்த மடிக்கணினி மற்றும் சில மதிப்புமிக்க விலையுயர்ந்த பொருட்களையும், மேலும் சில பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளை கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இதனால் புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்த பயணிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய ரயில் பயணிகள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை கொள்ளையடித்த கும்பலைப் பிடித்து தங்கள் உடைமைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவனை இன்று போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT