இந்தியா

காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

DIN

பயங்கரவாத அமைப்புகளுக்கு பிரிவினைவாதிகள் நிதி திரட்டி அளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் 12 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து தில்லியில் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக பிரிவினைவாதிகளால் நிதி உதவி அளிக்கப்பட்டுவந்தது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் ஸ்ரீநகர், பாராமுல்லா, ஹந்த்வாரா உள்ளிட்ட 12 இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்ததாக 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT