இந்தியா

கோர்க்கா லீக் தலைவர் கொலை வழக்கிலிருந்து ஜிஜேஎம் தலைவர் விடுவிப்பு

DIN

அகில இந்திய கோர்க்கா லீக் அமைப்பின் தலைவர் மதன் தமாங் கொலை வழக்கில் இருந்து கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட்சியின் தலைவர் விமல் குரூங்கை கொல்கத்தா பெருநகர நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.
இது தொடர்பான வழக்கு, பெருநகர நீதிமன்ற நீதிபதி குந்தன் குமார் குமாய் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் தமாங்கை கொலை செய்வதற்கு விமல் குரூங் சதித் திட்டம் தீட்டினார் என்று சிபிஐ தரப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.
அதே வேளையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விமல் குரூங்கின் மனைவி ஆஷா மற்றும் ஜிஜேஎம் கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் உள்பட 47 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, ''மதன் தமாங் கொலை செய்யப்பட்ட நாளன்று, காலிம்போங் நகரில் விமல் குரூங் இருந்தார்; எனவே, கொலையில் அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை சிபிஐயால் அளிக்க முடியவில்லை'' என்று அவரது தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதியில் தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வந்த அகில இந்திய கோர்க்கா லீக் அமைப்பின் தலைவர் மதன் தமாங், கடந்த 2010-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. டார்ஜீலிங் மலைப்பகுதியில் வேறு எந்த அரசியல் கட்சியும் பொதுக் கூட்டம் நடத்துவதைத் தடுக்கும் விதமாக, மதன் தமாங்கை விமல் குரூங் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
அதையடுத்து, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் விமல் குரூங்கைத் தவிர மற்றவர்கள் மீது, வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT