இந்தியா

தனிநபர் ரகசியங்களைக் காப்பதைவிட தேசத்தின் நலனே முக்கியம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

DIN

தனிப்பட்ட தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பதைக் காட்டிலும் தேசத்தின் நலனே முக்கியமானது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
தனிநபர் ரகசியம் காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முரணான வகையில் மத்திய அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்றும் அது தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கிரண் ரிஜிஜு இந்த விவகாரம் தொடர்பாகக் கூறியதாவது:
இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் மற்றும் இணையவழி பயன்பாடுகள் அதிமுக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றன. அவற்றில் சில சவால்களும், சிக்கல்களும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இணையவழி குற்றங்களையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
இத்தகைய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான வல்லமையும், ஆற்றலும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால், அதனை செயல்படுத்துவதற்கான திறன்தான் இன்னமும் முழமையாக வெளிப்படவில்லை. வல்லமைக்கும், செயல் திறனுக்கும் நடுவே உள்ள இடைவெளி குறைய வேண்டும். அப்போதுதான் இணையவழி குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்.
தனிநபர் தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பது என்பது அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைதான். அதை மறுதலிக்க முடியாது. அதேவேளையில் தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். என்னைப் பொருத்தவரை நாட்டின் நலன்தான் எல்லாவற்றையும் காட்டிலும் அதிமுக்கியமான ஒன்று என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT