இந்தியா

பெங்களூர் சிசிடிவி செய்தியை பார்த்து நாடகமாடிய ஜோடி; ஆதாரத்தை அளித்து தானே சிக்கிக் கொண்ட நபர்

DIN


பெங்களூர்: பெங்களூர் சிசிடிவி கேமராவில் வெளியான பாலியல் துன்புறுத்தல் விடியோ செய்தியைப் பார்த்து ஒரு காதல் ஜோடி அதே போல நாடகமாடி மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, பெங்களூரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஒரு சம்பவம், காதல் ஜோடிகளால் ஜோடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கோவிந்தபுரா பகுதியைச் சேர்ந்த 34 வயது இர்ஷாத் கான் என்பவரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஆவார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர். தங்கள் வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்தினால், பலாத்காரம் செய்யப்பட்ட பெண் என்பதால், உறவினரான தனக்கு அவரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று இருவரும் இதுபோன்ற திட்டத்தை தீட்டியுள்ளனர்.

பெங்களூரில் ஜனவரி 1ம் தேதி ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியான செய்தியைப் படித்ததும், இவர்களுக்கு இந்த யோசனை வந்துள்ளது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அராபிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்துக்கு அருகே 23 வயது பெண், மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இர்ஷாத் கானும் காவல்நிலையம் வந்து புகார் அளித்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சி ஆதாரத்தையும் காவல்நிலையத்தில் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, இர்ஷாத் கானும் தனது உடலில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், சிசிடிவி கேமராவில் முகத்தை மூடியடி பதிவாகியிருந்த குற்றவாளியின் நடை உடை பாவனைகள், இர்ஷாத் கானைப் போன்று இருந்ததால், காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இர்ஷாத் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியின் கணவர் இர்ஷாத் என்பதும், அவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT