இந்தியா

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோடி திட்டவட்டம்

DIN


புது தில்லி: ஜல்லிக்கட்டு விஷயத்தில் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க அவசரச் சட்டம் இயற்றுமாறு பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மோடி, ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும். தமிழக வறட்சி நிலை குறித்து ஆராய மத்தியக் குழு விரைவில் அனுப்பப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT