இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து ராஜினாமா

DIN

பெங்களூரூ: கர்நாடக முன்னாள் முதல்வரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பொழுது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் இன்று மாலை திடீரென  காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம் கட்டப்பட்டு வருவதாக அவர் தீவிர அதிருப்தியில் இருந்தார். அதனால்தான் அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும், இனி அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% அதிகரிப்பு

பாலியல் வழக்கு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை

SCROLL FOR NEXT