இந்தியா

ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டினார்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு!

IANS

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி , அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் கூறியதாவது:

ஆளுநர் திரிபாதி இன்று தொலைபேசியில் என்னிடம் மிரட்டும் தொனியில் பேசினார். அத்துடன் என்னை அவமானபடுத்தும் வகையில் நடந்து கொண்டார். அவர் இவ்வாறு செய்திருக்க கூடாது. அவர் ஒரு நியமனப் பதவியில் இருப்பவர். நான் பொது மக்களால் தேர்தெடுக்கப்பட்டவள். இவ்வாறு நீங்கள் என்னிடம் பேசக்கூடாது என்று அவரிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் குறிப்பாக என்ன விதமான உரையாடல்  இருவருக்கிடையே நடைபெற்றது என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT