இந்தியா

கல்வி நிறுவனங்களின் விடுதிக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி? நிதித்துறை விளக்கம்!

IANS

புதுதில்லி: கல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு, பெறப்படும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என்று ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. கல்வி மற்றும் அது தொடர்பான சேவைகளைப் பொறுத்த வரை, எந்த விதமான மாற்றமும் இல்லை.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு கல்வி நிறுவனமானது அதன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு, முற்றிலுமாக வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இது தொடக்க கல்வியில் இருந்து கல்லூரி வரையிலான படிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு பொருந்தும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT