இந்தியா

காஷ்மீரில் பலத்த மழை: 6 பேர் பலி; 11 பேர் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பலத்த மழை காரணமாக தோடா மாவட்டம், தாத்ரி கிராமத்தில் பாய்ந்தோடும் 'நுல்லா' நதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 2.20 மணியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால், வெள்ளம் வந்தது பலருக்கும் தெரியவில்லை. இதில், பல குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 வயது சிறுவனும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மெஹபூபா இரங்கல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிப்பவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க வேண்டும் என்று தோடா மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் மெஹபூபா உத்தரவிட்டார் என்று அந்த மாநில செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
உதம்பூரில் 3 உடல்கள் கண்டெடுப்பு: இதற்கிடையே, உதம்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT