இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு நிதி பிரிவினைவாதத் தலைவரின் மருமகன் உள்பட 7 பேர் கைது

DIN

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி வழங்கிய குற்றச்சாட்டில் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானியின் மருமகன் உள்பட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) திங்கள்கிழமை கைது செய்தது.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதி வரும் பாதையை முடக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏனெனில், போதிய நிதி ஆதாரம் இருப்பதால்தான் பயங்கரவாதிகளால் ஆயுதம் உள்ளிட்டவற்றை வாங்க முடிகிறது. மேலும், பல இயக்கங்கள் பணம் கொடுத்து இளைஞர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன. ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த இளைஞர்களுக்கும், சிறார்களுக்கும் பிரிவினைவாதிகள் பணம் அளிக்கின்றனர் என்பது பலமுறை நிரூபணமாகியுள்ளது.
எனவே, பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி செல்வதைத் தடுக்கும் நோக்கில், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ கடந்த மாதம் அதிரடி சோதனைகளை நடத்தியது. அப்போது ரூ.2 கோடி வரை ரொக்கம், பல்வேறு கணக்குப் பதிவேடுகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் 'லெட்டர் பேடுகள்' உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கைது நடவடிக்கைகளை என்ஐஏ திங்கள்கிழமை மேற்கொண்டது.
பிரிவினைவாதத் தலைவர் கிலானியின் மருமகன் அல்தாஃப் அகமது ஷா, கிலானிக்கு நெருக்கமானவரும் தெஹ்ரி-இ-ஹுரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான அயாஸ் அக்பர், பீர் ஃசைபுல்லா, ஹுரியத் மிதவாத அமைப்பின் ஷாகித்-அல்-இஸ்லாம் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அகமது ஷாவை காஷ்மீர் போலீஸார் ஏற்கெனவே தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT