இந்தியா

மும்பை 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர்ப் பகுதியில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோப்கர் தாமோதர் பார்க் பகுதியில் இருந்த 4 மாடி கட்டடத்தில் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில், அந்தக் கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் 23 பேரை மீட்டனர். அவர்களில் ஒரு குழந்தை, 7 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கீழ்தளத்தில் இருந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்ததால், கட்டடத்தின் தூண்கள் பலவீனமானதாகவும், இதனாலேயே கட்டடம் இடிந்து விட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கீழ் தளத்தில் இருக்கும் வீட்டின் உரிமையாளரான சுனில் சிதாப் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT