இந்தியா

எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்திற்கு உட்பட்ட சோப்பூரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சோப்பூரின் நடிப்போரா பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அய்யாபுரத்தில் தொழிலாளி குத்திக்கொலை

நாளை ஒண்டிவீரன் நினைவு தினம்

யானை பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

கந்தா்வகோட்டையில் நூல் வெளியீட்டு விழா

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT