இந்தியா

நாகலாந்தில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

நாகலாந்து: நாகலாந்தில் பயங்ரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தின் மான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பதுங்கியிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுவரை நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்ததாகவும் 3 பேர் காயமடைந்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், துப்பாக்கி சண்டையின் போது பொதுமக்கள் சிலரது மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

நாகலாந்து மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் தான் அதிகயளவில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அவ்வவ்போது போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் என்கவுண்ட்டரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT