இந்தியா

பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பயன்படுத்த வேண்டும்: ஊழியர்களுக்கு சமூக நலத்துறை உத்தரவு

தினமணி

தில்லி சமூக நலத்துறை ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பயன்படுத்த, துறைத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவலகத்துக்கு தாமதமாக வருவதாகவும், விரைவாகவே கிளம்பிச் சென்றுவிடுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு கீழ் படிய மறுப்பவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும், மாலை 6.30 மணி வரை அலுவலகப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், பொது விநியோகம், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சமூக நலத்துறை கொண்டுள்ளது. அரசு அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்கள் காலை 9.45 மணிக்கும் தாமதமாக அலுவலகத்துக்கு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமைச் செயலர் எம்.எம்.குட்டி கடந்த டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT