இந்தியா

"ஸ்பைடர்' ஏவுகணை சோதனை வெற்றி

DIN

வானில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தரையிலிருந்து தாக்கவல்ல "ஸ்பைடர்' ரக ஏவுகணையை இந்திய ராணுவம் வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட "ஸ்பைடர்' ரக ஏவுகணையானது வானில் பறக்கும் எதிரிகளின் இலக்குகளை மிக விரைவாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சம் 15 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இந்த ஏவுகணையால் இலக்கை துல்லியமாக தாக்க முடியும்.
இந்நிலையில், ஒடிஸா மாநிலம் பலாசோரில் இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் வியாழக்கிழமை சோதனை செய்தது. இதற்காக, வானில் சிறிய ரக விமானம் பறக்கவிடப்பட்டது. பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தானியங்கி ஏவுதளத்திலிருந்து "ஸ்பைடர்' ஏவுகணை இயக்கப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக அந்த விமானத்தை "ஸ்பைடர்' ஏவுகணை தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT