இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி: பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பெண்! 

பஞ்சாப் சர்வதேச எல்லைப் பகுதியில்க ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

DIN

சண்டிகர்: பஞ்சாப் சர்வதேச எல்லைப் பகுதியில்க ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பாகிஸ்தான் பகுதியில்  இருந்து,  இளம்பெண் ஒருவர் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவினார். எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளை கடந்து அவர் இந்தியாவை நோக்கி வந்தார்.

இதனைக் கண்டதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இளம்பெண்ணை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் எச்சரிக்கையை புறக்கணித்த அந்த பெண் தொடர்ந்து முன்னேறி வந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அந்த பெண்ணை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அந்த பெண் ஊடுருவிய நோக்கம் முறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

பிப்ரவரி மாதப் பலன்கள் - விருச்சிகம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT