இந்தியா

6 மாத சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு: நீதிபதி கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

DIN

தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாதது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவிட்டது உள்ளிட்ட விவகாரத்தில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், கர்ணனை உடனடியாக கைது செய்யுமாறு கொல்கத்தா போலீஸாருக்கு ஆணையிட்டது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உடனடி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கர்ணனின் வழக்குரைஞர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து வந்தது.
இந்நிலையில், கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதாவது, உச்ச நீதிமன்றத்தின் பதிவுத் துறை அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT