இந்தியா

பணம் மதிப்பிழப்பை சுயலாபத்திற்காக முதல்வர் கேஜரிவால் எதிர்த்தார்: கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டு

தினமணி

மத்திய அரசு அமல்படுத்திய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுயலாபத்திற்காக எதிர்த்தார் என்று தில்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

தில்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த  கபில் மிஸ்ரா அண்மையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் கேஜரிவால் மீதும், ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திய பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கேஜரிவால் தனது சுயலாபத்திற்காக எதிர்த்ததாக கபில் மிஸ்ரா வெள்ளிக்கிழமை புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கபில் மிஸ்ரா கூறியதாவது: தன்னுடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால்தான் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அரவிந்த் கேஜரிவால் கடுமையாக எதிர்த்தார். செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றது. மதிப்புக் கூடுதல் வரி (வாட்) செலுத்தாத பல நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி நன்கொடை பெற்றது.

உயர் மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கேஜரிவால் எதிர்த்ததற்கும், அதற்காக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ததற்கும் இதுவே காரணம். தனக்கு நெருக்கமானவர்கள் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்ததும், அதைக் கண்டறிய அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதும்தான் கேஜரிவால் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க காரணமாக இருந்தது.

முந்தைய ஆட்சியில் தில்லியைச் சேர்ந்த வணிகர் முகேஷ் குமாரின் நிறுவனம் "வாட்' வரி செலுத்தாததால் அவரது நிறுவனத்துக்கு தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நபர் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருமளவில் நன்கொடை அளித்தவர். இந்நிலையில் 2013-இல் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் முகேஷ் குமாருக்கு எதிரான நடவடிக்கையை அரசு கைவிட்டது என்றார் கபில் மிஸ்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT