இந்தியா

இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

DIN

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சிக்காக திரண்டிருந்த கூட்டத்தில் குண்டு வெடித்ததில் முதலில் 19 பேர் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மான்செஸ்டர் நகரில் உள்ள வடக்கு இங்கிலிஷ் சிட்டி என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு (மே 22) அமெரிக்க பிரபல பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டியின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகம் பொங்க இசை நிகழ்ச்சியை உற்சாகம் பொங்க ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் திடீரென அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பெரும் கூச்சலோடு, கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடியதால் அங்கு குழப்பம் நிலவியது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மான்செஸ்டர் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நேரிட்ட இடத்திலிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ள போலீஸார், அந்தப் பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், குண்டி வெடிப்பில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறை உயர் அதிகாரிகள், ஆணிகள் உள்ளிட்ட கூர்மையான இரும்புக் கம்பிகள் வெடித்துச் சிதறிய வெடிகுண்டில் வைக்கப்பட்டிருந்தாக தெரிவித்தனர்.

இதனிடையே, மான்செஸ்டர் நகர் வெடிகுண்டு தாக்குதலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கண்டனம் குரல் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT