இந்தியா

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமல்

DIN

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23-ம், டீசலின் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதையடுத்து, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23-ம், டீசலின் விலை 89 காசுகளும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோலியப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரிகளில் வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே, அந்தந்த மாநிலங்களின் வரி விதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளிலும் வேறுபாடுகள் இருக்கும்.

அதன்படி, விலை உயர்வுக்கு பிறகு தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.91-ஆகவும் (பழைய விலை ரூ.65.32), டீசலின் விலை ரூ.55.94-ஆகவும் (பழைய விலை ரூ.54.90) உள்ளது.

சென்னையில்...: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.93-ஆகவும் (68.26)டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.22-ஆகவும் (58.07) விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16-ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.10-ம் கடந்த 16-ஆம் தேதி குறைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT