இந்தியா

பாக். மீனவர்கள் 3 பேரை கைது செய்தது பிஎஸ்எஃப்

தினமணி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்தனர். 5 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
 இதுகுறித்து பிஎஸ்எஃப் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 சர்வதேச கடல் பகுதியையொட்டியுள்ள கட்ச் மாவட்டம், ஹராமி நாலா கழிமுகப் பகுதியில் தடையை மீறி பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 3 மீனவர்களைக் கண்டனர். இதையடுத்து, அவர்களை வீரர்கள் கைது செய்தனர். அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் மூவரும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 பிஎஸ்எஃப் அதிகாரிகளுடன் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT