இந்தியா

டெங்கு பாதித்து சிறுமி பலி: ரூ.16 லட்சம் கட்டணம் கேட்கும் மருத்துவமனை

DIN


புது தில்லி : டெங்கு பாதித்து 15 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மரணம் அடைந்த 7 வயது சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சத்தை கட்டணமாகக் கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகிராமில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் 7 வயது சிறுமி டெங்கு பாதித்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 15 நாட்கள் ஐசியுவில் வைத்திருந்த மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக அறிவித்தது. அதோடு, அவருக்கு சிகிச்சை அளித்ததற்கு ரூ.15 லட்சத்தை கட்டணமாகக் கேட்டுள்ளது.

அவளது உடல்நிலை மோசமடைந்து குணப்படுத்தவே முடியாது என்று தெரிந்த பிறகும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

"மருத்துவர்கள், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பல நாட்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது மூளை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வந்தது. அது பற்றி மருத்துவர்கள் சோதிக்கவே இல்லை. அவரது மூளை செயலிழந்தபிறகும் கூட தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்" என்கிறார் அவரது தந்தை ஜெயந்த் சிங்.

குழந்தைக்கு எம்ஆர்ஐ சோதனை செய்யுமாறு குடும்பத்தினரும் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்தே கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் சோதித்துப் பார்த்தது. அதில்தான், ஒன்றும் செய்ய முடியாது, குழந்தையின் மூளை 70 முதல் 80 சதவீதம் இறந்துவிட்டது என்று தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல், குழந்தையின் மரணத்தால் நாங்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த போது மேலும் ஒரு அதிர்ச்சியை மருத்துவமனை கொடுத்தது. ஆம், அது மருத்துவமனை கட்டணம் ரூ.16 லட்சம் என்பதுதான் என்கிறார் தந்தை.

சிறுமி மரணம் அடைந்த பிறகு, உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்கவில்லை. மேலும், சிறுமிக்கு மரணச் சான்றிதழ் அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு மரணச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

"இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.. பல விதிகள் தவறாக உள்ளது" என்கிறார் ஜெயந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT