இந்தியா

156 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை: ஏன்? எதற்கு தெரியுமா?

DIN


முதன் முதலாக அதாவது 156 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஏன்? எதற்காகப் பதிவு செய்யப்பட்டது என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி காவல்துறையினரால் 1861ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 18ம் தேதி இந்தியாவில் முதன் முறையாக, முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

தில்லியின் சப்ஸி மண்டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஒரு வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் பற்றியது. அதுவும், அந்த வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களும் புகைக்கப் பயன்படுத்தும் ஹுக்காவும் திருடுப் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

45 அனாக்கள் (தற்போது 2.81 ரூபாய்) மதிப்புள்ள பொருட்கள் வீட்டில் இருந்து களவு போனதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சமையல் பாத்திரங்கள் 3, சிறிய 3 பாத்திரங்கள், ஒரு கிண்ணம், ஒரு ஹுக்கா, சில ஆடைகள் திருடுப் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில், தில்லி காவல்துறையினர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டனர். இது பலரால் விருப்பப்பட்டு, பகிரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT