இந்தியா

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

DIN

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கில் எதிர் மனுதாரரான தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்யலாம் என்று பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய ஏதுவாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT