இந்தியா

பலாத்காரத்துக்கு உள்ளான 13 வயது சிறுமியின் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

DIN


புது தில்லி: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 13 வயது சிறுமியின் கருவில் வளரும் 32 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனை மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவா ராய், ஏ.எம். கன்வில்கார் ஆகியோர் கொண்ட அமர்வு, கருவைக் கலைக்க அனுமதி வழங்கியது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செப்டம்பர் 8ம் தேதி கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி சார்பில், அவரது வயிற்றில் வளரும் 32 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மருத்துவ முறையில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப் பிரிவு 3(2) (பி), 20 வாரத்துக்கு அதிகமான கருவைக் கலைப்பதை தடை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT