இந்தியா

இந்தியா 2019-க்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத தேசமாக மாறும்: ராஜ்நாத் சிங்

DIN

இந்தியா வரும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாகும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் சார்பில் "தூய்மையே சேவை' என்ற பிரசார இயக்கத்தை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தூய்மை செயல்திட்டங்களை 76 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலமாக அமல்படுத்த ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டித்தரப்படும். வீடுகளில் கழிப்பறை இருப்பது பெண்களுக்கு கௌரவம் அளிப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. "தூய்மையே சேவை' பிரசாரத் திட்டம் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு போக்கப்படும்.
சிக்கிம், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், ஹரியாணா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 4.60 லட்சம் வீடுகளிலும், 4 லட்சம் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வீணாகும் பொருள்களில் இருந்து உபயோகமான பொருள்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT