இந்தியா

நவீன யுகத்தில் பொறியாளர்களின் திறமைக்கு முழு அங்கீகாரம் உள்ளது: மனோகர் பாரிக்கர்

DIN

இன்றைய நவீன யுகத்தில் பொறியாளர்களின் திறமைக்கு முழு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ஆம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
இந்தியாவின் பொறியாளர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக செப்டம்பர் 15-ஆம் தேதியை பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம். பரசுராமர் கோவா பகுதியை உருவாக்கினார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அவர் மிகச்சிறந்த பொறியாளர். எனவே, தான் கடலில் இருந்து நிலத்தை மீட்டுள்ளார். பொறியியல் துறை என்பது உலகின் மிகப் பழமையான கலை. அக்காலத்தில் இருந்த நமது நாட்டில் பல பொறியியல் வல்லுநர்கள் இருந்த உள்ளனர். இன்றைய நவீன யுகத்தில் பொறியாளர்களின் திறமைக்கு முழு அங்கீகாரம் உள்ளது என்றார் அவர்.
இதனிடையே, நாகாலாந்து மாநில அரசு சார்பிலும் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை தங்கள் திறமை மூலம் எதிர்கொள்ள பொறியாளர்கள் உறுதி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT