இந்தியா

தேரா சச்சா தலைமையகத்தில் 600 எலும்புக் கூடுகள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

DIN

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம் ரஹீமின் தேரா சச்சா தலைமையகத்தில் 600 எலும்புக் கூடுகள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் காவல்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பெண் சாமியார்கள் தங்கியிருக்கும் அறைக்கு ராம் ரஹீம் சிங் அறையில் இருந்து ரகசிய சுரங்கப் பாதை அமைத்திருந்தது, பிளாஸ்டிக் நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன. 

இந்த நிலையில், தேரா சச்சா அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் பிஆர் நைன் கைது செய்யப்பட்டு அவரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, தேரா சச்சா தலைமையகத்தில் குறைந்தது 600 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, ஜெர்மனைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரின் ஆலோசனைப்படி உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதைக்கப்பட்டிருக்கும் 600 உடல்களும், ராம் ரஹீமால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், சொர்கத்துக்கு செல்லலாம், இறைவனை அடையலாம் என்று கூறி ஏமாற்றிக் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால், தேரா சச்சா அமைப்பின் தொண்டர்கள் பலரும், இறப்புக்குப் பிறகு தங்களது உடல்களை தலைமையகத்துக்குள்தான் புதைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது உடல்கள்தான் அவை என்று தேரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தகவல் பரப்பி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT