இந்தியா

பெண் கடவுள் துர்க்கையை அவமதித்து பேஸ்புக் பதிவு: தில்லி பேராசிரியர் மீது போலீசில் புகார்!

DIN

புதுதில்லி: இந்துப் பெண் கடவுளான துர்க்கையை அவமதித்து பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்ட தில்லி பல்கலை கழக பேராசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தில்லி பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தயாள் சிங் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றுபவர் கேதர் குமார் மண்டல். இவர் நேற்றிரவு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இந்துப் பெண் கடவுளான துர்க்கையை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதற்கு உடனே கிளம்பிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து அதனை நீக்கி விட்டார்.

இதனை அடுத்து தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணி என்னும் அமைப்பினை சேர்ந்தவர்கள் பேராசிரியர் மண்டல் மீது போலீசில் புகார் அளித்தனர். அத்துடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அவரது செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பேராசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்துப் பண்டிகையான நவராத்திரி வாரம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேராசிரியர் மண்டலின் செயல்பாடு உள்ளதால், அவரது வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிக்கவும்  அவர்கள் வேபடுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT