இந்தியா

தில்லி பேரவை வளாகத்தில் அப்துல் கலாம், லால் பகதூர் சாஸ்திரி உருவப்படம் இன்று திறப்பு

DIN

வரலாற்றுச் சிறப்பு மிக்க தில்லி சட்டப்பேரவையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பேரவைத் துணைத் தலைவர் ராக்கி பிர்லா, எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, தில்லி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

நிகழாண்டு குடியரசு தினத்தையொட்டி தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பகத் சிங், பிர்ஸா முண்டா, சுபாஷ் சந்திரபோஸ், திப்பு சுல்தான் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் 70 பேரின் படங்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT