இந்தியா

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018)

DIN


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

உடல் நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் தில்லியில் கூடி முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறது.

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT