இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்வு அறிவிப்பு 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்த்தப்படுவதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்த்தப்படுவதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தில்லியில் புதனன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்த்தப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வரும் மாத ஊதியம் பெறும் பொழுது அவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்குமான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சேர்த்து வழங்கபப்டும்.

இதன் காரணமாக 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, இந்த இரு மாதங்களுக்காக மத்திய அரசுக்கு ரூ 4024 கோடியும், வருடத்திற்கு ரூ 6112 கோடியும் செலவாகும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT