இந்தியா

தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் சந்திரசேகர ராவ் 

DIN

தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியமைக்க சந்திரசேகர ராவ் உரிமை கோரினார். 

தெலங்கானா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டி.ஆர்.எஸ். கட்சியே முன்னிலை வகித்தது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளிவரும்போதும், அக்கட்சியின் முன்னிலை விகிதம் அதிகரித்தபடியே இருந்தது. 

காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு போதிய ஆதரவு இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். 88 தொகுதிகளில் வென்றது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தெலங்கானாவில் 2-ஆவது முறையாக டி.ஆர்.எஸ். ஆட்சியமைக்கிறது. தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.  

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் நரசிம்மனை இன்று நேரில் சந்தித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி விவகாரக் கூட்டங்களில் இணையவழியில் பங்கேற்க உத்தரவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

‘உலக அரசியல் சமநிலையை ரஷிய-சீன நல்லுறவு உறுதி செய்யும்’

பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு

SCROLL FOR NEXT