இந்தியா

டெண்டுல்கர் மகள் பெயரில் போலி சுட்டுரைக் கணக்கு தொடங்கியவர் கைது

DIN

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் பெயரில் போலியாக சுட்டுரைக் கணக்கு தொடங்கிய கணினி மென்பொருள் பொறியாளர், மும்பையில் கைது செய்யப்பட்டார். அந்த சுட்டுரைப் பக்கம் வாயிலாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு எதிரான கருத்துகளை அவர் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, காவல் துறை துணை ஆணையர் (சைபர் கிரைம்) அக்பர் பதான் வியாழக்கிழமை கூறியதாவது:
மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த நிதின் ஷிசோடே(39), கணினி-இணையதளம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரை, சைபர் கிரைம் போலீஸார் இரு தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி, 2 செல்லிடப்பேசிகள், ஒரு இணையதள இணைப்புக் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில், சில ஹிந்தி நடிகர், நடிகைகளின் பெயர்களிலும் நிதின் ஷிசோடே போலி சுட்டுரைக் கணக்குகளைத் தொடங்கியது தெரியவந்தது. அவர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் ஆள்மாறாட்டம் செய்தது, ஏமாற்றியது, அவதூறு பரப்பியது ஆகிய பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். அவரது பெயரில் உருவாக்கப்பட்ட போலி சுட்டுரைக் கணக்கில் இருந்து சரத் பவாருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, டெண்டுல்கரின் உதவியாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர், அந்தேரியில் உள்ள நிதின் ஷிசோடே வீட்டில் இருந்து சுட்டுரைக் கணக்கில் அந்தத் தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT