இந்தியா

பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தறுத்துக் கொன்ற  தாய்!

பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, அதன் தாய் கழுத்தறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

PTI

தார்: பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, அதன் தாய் கழுத்தறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ளது தல்வாடி கிராமம். இந்த கிராமத்தில்தான் கடந்த 7-ஆம் தேதியன்று இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வருபவர் அனிதா சிங் (25). சம்பவத்தன்று அனிதாவின் ஒரு வயது பெண் குழந்தை பால் குடிப்பதற்காக தொடந்து அழுது கொண்டே இருந்தது. அனிதா வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தையின் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்ததால், அனிதா ஆத்திரத்துடன் வீட்டுக்குள்ளே சென்றார்.

வெளியே அமர்ந்திருந்த அவரது மாமியாரின் கூற்றுப்படி அனிதா வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தையின் அழுகைச் சத்தம் நின்று விட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது மாமியார் அக்கம்பக்கத்தாரை அழைத்துள்ளார். அவர்களனைவரும் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது குழந்தை அங்கே கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர்.  அனிதா உடனடியாக கைது செய்யப்பட்டார். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் எரிச்சலின் காரணமாக கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.   

இந்த தகவல்களை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராய்சிங் நர்வாரியா தெரிவித்தார். பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, அதன் தாயே கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் சாா்பில் மரக்கன்று நடவு

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கடற்கரையில் தூய்மைப் பணி

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

ஆறுமுகனேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT