இந்தியா

முகுல் ராயைக் கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு

DIN

அரசியல் ஆலோசகரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர் முகுல் ராயைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை மார்ச் 31-ஆம் தேதி வரை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்த முகுல் ராய், கருத்து வேறுபாடு காரணமாக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்தார்.
முகுல் ராய், அரசியலுக்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில், அவரது ஆலோசகராக அறியப்பட்டவர் சிங்கா ராய். இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர், கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்த பிறகு முகுல் ராயின் கண்காணிப்பின் கீழ் விடுதி ஒன்றில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிங்கா ராய், சுயநினைவின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, சிங்கா ராயின் சகோதரி போலீஸில் புகார் அளித்தார். விடுதியில் சிங்கா ராய் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாததால், உள்ளூர் நீதிமன்றத்தை அந்தப் பெண் அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முகுல் ராய்க்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி முகுல் ராய் தாக்கல் செய்த மனு மீது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகுல் ராயைக் கைது செய்ய பிப்ரவரி 14-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கு, நீதிபதிகள் ஜாய்மால்யோ பக்சி, ஆர்.பரத்வாஜ் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மார்ச் 11-ஆம் தேதி வரை முகுல் ராயை கைது செய்வதற்கு தடை விதிப்பதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT