இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Raghavendran

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டி அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். 

ஆனால், மனுதாரர் வர்த்தகம் தொடர்பான பணிக்காக செல்கிறார். மனுதாரரை அனுமதித்தால் வழக்கின் சாட்சிகளைக் கலைக்ககூடும். மேலும் லுக் அவுட் நோட்டீசின் செல்லுபடி காலம் முடிய மூன்று மாதங்களே உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் பிப்ரவரி 17-ந் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரையிலான பயண திட்டத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT