இந்தியா

40 சதவீத ஏற்றுமதி இலக்கை எட்ட புதிய செயல் திட்டம்: அமைச்சர் சுரேஷ் பிரபு

DIN

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏற்றுமதியின் பங்களிப்பை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை மத்திய அரசு விரைவில் உருவாக்கவுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்களிப்பு தற்போது 18 சதவீதமாக உள்ளது. இதனை, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை மத்திய அரசு விரைவில் உருவாக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிப்பதே தற்போதைய அரசின் பொருளாதாரத் திட்டமாகும். எனவே, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் முறையான திட்டமிடலுடன் வர்த்தகர்கள் அரசை அணுக வேண்டும்.
ஏற்றுமதி வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து மாநில அமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களே, நாட்டில் 70 சதவீத ஏற்றுமதிக்கு பங்களிக்கின்றன. பொருளாதார மேம்பாட்டுக்காக மகாராஷ்டிர அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT