இந்தியா

பிரதமர் மோடி சென்னை வருகை: தமிழக முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

DIN

பிரதமர் நரேந்திரமோடியின் சென்னை வருகை தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் இரு சக்கர மானியத் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
இதையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். 
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது: தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். 
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். குளச்சல், இணயம் துறைமுகம் திட்டம் மக்களைப் பாதிக்காத வகையில் நிறைவேற்றப்படும் என முதல்வரிடம் கூறினேன்.
15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையால் தமிழகத்துக்கான நிதி குறையும் என்பது தவறான தகவல். 
தமிழகத்துக்கான நிதி வழக்கம்போல் ஒதுக்கப்படும். தமிழகத்தில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக நான் கூறிய கருத்தில் மாற்றம் ஏதும் இல்லை. 
பிரதமர் கூறியதால்தான் அமைச்சராகப் பதவியேற்றேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவர்கள் இருவர் தொடர்பானது. அதில், நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT