இந்தியா

முத்தலாக் கூறி விவாகரத்து: முஸ்லிம் பெண் புகார்

DIN

செல்லிடப்பேசியில் மூன்று முறை தலாக் எனக் கூறி கணவர் விவாகரத்து செய்துவிட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கௌஷம்பி மாவட்டம், மஞ்ச்ஹன்பூர் கோத்வாலி பகுதியைச் சேர்ந்த 36 வயது ரோஸி பேகம் என்பவர் புகார் அளித்தார்.
அதில், அவரது கணவர் சௌரவ் செல்லிடப்பேசியில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளன. அந்தப் புகார் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து சௌரவைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உடனடி முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்தால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT