இந்தியா

மார்க்சிஸ்ட் கட்சியின் 3 நாள் மத்தியக் குழு கூட்டம்: மேற்கு வங்கத்தில் தொடங்கியது

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் 3 நாள் கூட்டம், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, ஹைதராபாதில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய அரசியல்ரீதியான தீர்மானங்களை இறுதிசெய்வதற்காக, மத்தியக் குழுவின் 3 நாள் கூட்டம், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கூட்டத்தில், இரண்டு வரைவுத் தீர்மானங்கள் முன்வைக்கப்படவுள்ளன. அதில் ஒரு தீர்மானத்தில், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகச் செயல்படுவது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஆதரவாக உள்ளனர்.
மற்றொரு தீர்மானத்தில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்றும், காங்கிரஸுடன் கூட்டணி எதுவும் வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், கேரள மாநில கட்சியினரும் ஆதரவாக உள்ளனர். கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளபோதும், பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை முன்னெடுப்பது என்பதில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்.
மத்தியக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்மானம், கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்படும். தீர்மானங்களின் மீது மத்தியக் குழுவால் ஒருமித்த முடிவு எடுக்க முடியாவிட்டால், வாக்கெடுப்பு மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT