இந்தியா

திருமலையில் வேற்று மதப் பிரசாரம் செய்த பெண் கைது 

திருமலையில் வேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். 

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலையில் வேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருமலையில் வியாழக்கிழமை இரவு பாபவிநாசம் செல்லும் மாா்கத்தில் உள்ள புரோகிதா் சங்கம் பகுதியில் ஒரு வயதான பெண்மணி வேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதற்கு அங்கிருப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அவா் வராக சுவாமி விருந்தினா் மாளிகை பகுதிக்கு வந்து அங்கும் அதே பிரசாரத்தில் ஈடுபட்டாா். 

இதுகுறித்து உள்ளூா்வாசிகள் கண்காணிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அவா்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து அப்பெண்மணியை விசாரித்தனா். அதில் அவா் மனநிலை பாதிப்பவா் போல் காணப்பட்டாா். அவரைக் கைது செய்து கீழ் திருப்பதிக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT