இந்தியா

உத்தர பிரதேச விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ANI

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை கலந்துகொண்டார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ரோஸா எனுமிடத்தில் விவாசியகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, நம்முடைய விவசாயிகளுடன் இருப்பதை நான் எப்போதுமே விரும்புகிறேன். அவர்களின் கடின உழைப்பு தான் இந்தியாவை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜான்பூர் மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழை அறிவிப்பு உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாமடைந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடிமருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT