இந்தியா

லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும்: அருணாசல் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தினமணி

அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை விரைந்து அமைக்க வேண்டும் என்று அருணாசலப் பிரதேச அரசுக்கு குவாஹாட்டி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 லோக் ஆயுக்த அமைப்பை அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு சமூக நல ஆர்வலரான பாயி கியாடி என்பவர் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்தார்.
 அதில், "அரசு அலுவலகங்களில் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக லோக் ஆயுக்த அமைப்பை கூடிய விரைவில் அமைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
 அப்போது, அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆஜாகி முன்வைத்த வாதம்:
 கடந்த 5-ஆம் தேதி அருணாசல் அரசின் தலைமைச் செயலர் சத்ய கோபால், இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.
 அதில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கு யார் யாரையெல்லாம் நியமிக்கலாம் என்பதற்கான பட்டியலை தயார் செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்து என்று தனது வாதத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கூடிய விரைவில் லோக் ஆயுக்த அமைப்பை அமைக்க வேண்டும் என்று கூறி பொது நல மனுக்களை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT