முகப்பு
இந்தியா

மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

12-ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு, மாணவர்களுக்கு 3 ஆண்டு கட்டாய ராணுவக் கல்வி அளிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2018, 1:15 am IST
பகிர்:

12-ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு, மாணவர்களுக்கு 3 ஆண்டு கட்டாய ராணுவக் கல்வி அளிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு, அரசுப் பணியிலோ அல்லது ராணுவத்திலோ சேர்வதற்கு முன் 3 ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது, மாணவர்களுக்கு கட்டாய ராணுவக் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், புணேவில் உள்ள தேசிய ராணுவ அகாதெமியில் முறைகேடு செய்து பணிக்கு சேர்ந்ததாக 13 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ கடந்த ஆண்டு, முதல் கட்ட விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், 5 பேருக்கு எதிராக கடந்த மே மாதம் முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இந்த முறைகேட்டில் ராணுவ அதிகாரிகள் யாருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments