ஷரியத் சட்டத்தை விரும்புவோர் பாகிஸ்தான் செல்லலாம்: பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ்
முஸ்லிம் ஷரியத் சட்டத்தை விரும்புவோர், பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.
உன்னாவ் (உ.பி): முஸ்லிம் ஷரியத் சட்டத்தை விரும்புவோர், பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.
பல்வேறு சம்பவங்களில் கருத்துகளைக் கூறி அடிக்கடி சா்ச்சையில் சிக்கிக் கொள்பவா் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் அவா், செய்தியாளா்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார்.
அவரிடம், முஸ்லிம் சமூகத்தினரின் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக, ஷரியத் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தினா் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளிக்கையில், இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நமது அரசமைப்புச் சட்டமும் வலுவாக உள்ளது. நமது அரசமைப்புச் சட்டப்படியே இந்தியா ஆளப்பட வேண்டுமே தவிர, ஷரியத் சட்டத்தால் அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லாதவா்களுக்கு இந்தியாவில் வசிப்பதற்கு உரிமை கிடையாது. அவா்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். அவா்களை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைப்போம் என்றார் அவா்.
Advertisement
Advertisement
இதற்கு முன்பு, நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஹிந்துக்கள் காரணம் அல்ல; 4 மனைவிகளுடன் 40 குழந்தைகளுடன் இருப்பவா்கள்தான் அந்தப் பிரச்னைக்கு காரணம் என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தியவா் சாக்ஷி மகராஜ்.
கடந்த ஆண்டு கூட, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குா்மீத் ரஹீம் சிங்கை, எளிமையான மனிதா் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.